கனடாவின் டொராண்டே மாநிலத்தின் சிறுவர் பாடசாலைகள் மூடும் நிலையில்
கனடாவின் டொராண்டே மாநிலத்தின் அநேகமான பாலர் பாடசாலைகள், சிறுவர் பாடசாலைகள் மற்றும் சிறுவர்களுக்கான விஷேட வகுப்புக்கள் போன்றன மூடப்பட வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மாநில அளவில் கிடைக்க வேண்டிய சில நிதிகள் தடை செய்யப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு சிறுவர் பாடசாலையின் நிர்வாகிகள் கூறும் போது, நாங்கள் கடைசியாக கடந்த ஓகஸ்ட் மாதத்திற்கான காசோலையினையே பெற்றோம்.
அதற்கு பின்னர் எந்த விதமாக கொடுப்பனவுகளும் இல்லை. இப்போது பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவதற்கு எங்களிடம் போதிய பணம் இல்லை என்றுள்ளனர்.
இதேவேளை, இது குறித்த மாநில கல்வி அமைச்சு கூறுகையில், குறித்த நிதியானது கடந்த 2015 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட இருந்ததாகவும், இருந்த போதிலும், இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை நீடிப்புச் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.
மேலும், எதிர்வரும் காலங்களில் கல்வி அமைச்சின் நிதிப்பங்களிப்பு இன்றி தாமாக பாடசாலையை முற்கொண்டு செல்ல குறித்த பாடசாலை நிர்வாகங்களிற்கு இந்த வருட ஆரம்பத்திலேயே அறிவுறுத்தப்பட்;டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.