கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட தயாராகின்றாரா கிரிஸ் அலெக்சாண்டர்?
கனடாவின் பெரும் கட்சிகளில் ஒன்றான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கிரிஸ் அலெக்சாண்டர் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தலைமை பதவியில் இருந்து விலகினார்.
இதனையடுத்து, முன்னாள் குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஜேசன் கனி தலைமைப்பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தற்போது, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கிரிஸ் அலெக்சாண்டர் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடப்போவதாக செய்திகள் கசிந்துள்ளன.
இருப்பினும் இது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை.