கனடாவின் கியூபெக் துப்பாக்கிப்பிரயோகம்: இரு அல்ஜிரியர்களின் உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கனடாவின் கியூபெக் துப்பாக்கிப்பிரயோகம்: இரு அல்ஜிரியர்களின் உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கனடாவின் கியூபெக் நகரில் மக்கள் அதிகமாக கூடும் பள்ளிவாசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்த இரு அல்ஜிரியர்களின் உடலங்கள் நேற்று (சனிக்கிழமை) அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 7 மணியளவில் மேற்குறித்த இருவர்களின் உடலங்களும், அல்ஜீரிய மற்றும் கனடா அரசாங்கங்களின் கூட்டு படையினரின் துணையுடன் அல்ஜீரியாவின் Houari Boumedienne விமான நிலையத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. இதன்போது, அல்ஜீரிய அரசாங்கம் அதிகாரிகளுடன் சேர்ந்து, இரு பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் குறித்த இரு உடலங்களை பெற்றுக்கொண்டனர்.

இதில் உயிரிழந்த 60 வயதான காலித் Belkacemi இன் மனைவி கூறுகையில், எட்டு மணியளவில் மசூதியில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. அந்த இரவு என் கணவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. தற்போது அவரை நான் நிரந்தரமாக இழந்து விட்டேன் என கண்ணீருடன் கூறினார்.
Khaled-Belkacemi-victime
மற்றொருவரான 42 வயதான Abdelkrim Hassane இன் சகோதரன் கூறுகையில், குறித்த துப்பாக்கி சூட்டை கண்டித்த அவர், ‘வெறுக்கத்தக்க’ மற்றும் ‘வெட்கமற்ற’ என துப்பாக்கி சூடு என கூறினார்.

கியூபெக் நகர மசூதி துப்பாக்கி சூட்டில், நேற்று சனிக்கிழமை வரையிலான நிலவரப்படி, ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News