கனடாவின் கல்லூரிகள் – பல்கலைக்கழகங்கள் பூட்டு
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் ஹமில்டன் நகரப்பகுதியில் ஹால்டன் மற்றும் நயக்ரா ஆகிய பிராந்தியங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகின்ற நிலையில், அப்பகுதிகளிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என்பன மூடப்பட்டுள்ளன.
கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஷெரிடன் கல்லூரி, பிராக் பல்கலைக்கழகம், மோஹாவ்க் கல்லூரி மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியன இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஹமில்டன், நயாகரா, பர்லிங்டன் மற்றும் ஓக்விலி ஆகிய பிராந்தியங்களில் சுற்றுச்சூழல் கனடா அமைப்பினால், பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று இரவு வேளையில் 20 முதல் 30 சென்ரிமீற்றர் வரையான கடும் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அவதானத்துடன் செயற்படுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.