கனடாவின் ஒலிவர் பகுதியில் நில அதிர்வு
சனிக்கிழமை பிரிடிஷ் கொலம்பியாவுக்கு அருகில் உள்ள ஒலிவர் எனும் இடத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது நில அதிர்வு அளவீட்டுக் கருவிகளில் 4.0 ரிக்டர் அளவிலான அதிர்வாகப் பதியப்பட்டுள்ளது.
ஒகநாகன் பள்ளத்தாக்கிற்கு அருகில் அமைந்துள்ள ஒலிவர் பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வின் தாக்கத்தினை அப்பகுதி மக்கள் சுமார் 25 செக்கன்களுக்கு உணர்ந்துள்ளனர்.
அதேபோன்று, கிராண்ட் போர்க்ஜ், பிரிடிஷ் கொலம்பியா மற்றும் வொசிங்டன் மாநிலங்களின் சில பகுதிகளிலும் ஒலிவர் நில அதிர்வின் தாக்கங்கள் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நில அதிர்வு ஏற்பட்டவுடன் அது 4.3 ரிக்டர் அளவிலான தாக்கமாகப் பதிவாகியுள்ளதாக கனடாவின் நீல அதிர்வு தொடர்பிலான மையம் அறிவித்திருந்தது. எனினும் அதன் பின்னர் அது 4 ரிக்டர் அளவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நில அதிர்வு நிலத்திற்குக் கீழ் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.