கனடாவின் இளம் பேச்சாளர் என வர்ணிக்கப்படும் Mustafa Ahmed இளைஞர் ஆலோசனைக் குழுவின் முதல் உறுப்பினராக
கனடாவின் இளம் பேச்சாளர் என வர்ணிக்கப்படும் Mustafa Ahmed, அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் 15 உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் ஆலோசனைக் குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் முதல் நபராகவும் இவர் விளங்குகின்றார்.
தொடர்ச்சியாக இளைஞர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறிவரும் 20 வயதான Mustafa Ahmed, ரீஜண்ட் பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவராவார்.
இந்த நிலையில், பிரதமரின் ஆலோசனையில் பேரில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இளைஞர் ஆலோசனைக் குழுவில் இணைவதற்கு சுமார் 14 ஆயிரம் இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் வெறும் 15 பேரே தெரிவு செய்யப்பட உள்ள நிலையில், அதன் முதல் உறுப்பினராக தெரிவாகும் பெருமையை Mustafa Ahmed பெற்றுள்ளார்.
இவர் பாராளுமன்றத்தில் உரையாற்ற தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி இளைஞர்கள், தொழில் வாய்ப்புத் தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.