டி-20 உலகக் கிண்ணத்தின் முதல் நாளில் நடைபெற்ற போட்டியொன்றில் ஐ.சி.சி. பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ள பங்களாதேஷை ஸ்கொட்லாந்து ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தில் நேற்று மாலை ஓமான் அல் அமிரத் மைதானத்தில் நடைபெற்ற பி குழுவுக்கான தகுதிச் சுற்று போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஓமான் அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை ஸ்கொட்லாந்துக்கு வழங்கியது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஸ்கொட்லாந்து பங்களாதேஷின் பந்து வீச்சுகளில் தடுமாறி 53 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின்னர் கைகோர்த்த கிறிஸ் கிரீவ்ஸ் – மார்க் வாட்டின் பொறுப்பான ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை குவித்தது ஸ்கொட்லாந்து.
கிறிஸ் கிரீவ்ஸ் 45 (28) ஓட்டங்களையும், மார்க் வாட் 22 (17) ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெய்டி ஹசான் 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் சஹிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டாஸ்கின் அகமட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
141 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஸ்கொட்லாந்தின் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆரம்ப வீரர்களான செமியா சர்கார் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சஹிப் அல் ஹசன் (20), முஷ்பிகுர் ரஹீம் (38), அணித் தலைவர் மஹ்மதுல்லா (23) ஆகியோர் ஓரளவு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
எனினும் அவர்களும் ஸ்கொட்லாந்தின் பந்து வீச்சுகளில் சிக்கி வெளியேறினர்.
இறுதியாக பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, தோல்வியைத் தழுவியது.
பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து சார்பில் பிராட்லி வீல் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் டேவி மற்றும் மார்க் வாட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் பெற்றனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை கிறிஸ் கிரீவ்ஸ் பெற்றார்.
இதேவேளை நேற்று பிற்பகல் அதே மைதானத்தில் நடைபெற்ற குழு பி யின் மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா மற்றும் ஓமான் அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
130 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான், 13.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 130 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஓமான் சார்பில் அகிப் இலியாஸ் 50 (43) ஓட்டங்களையும், ஜதிந்தர் சிங் 73 (42) ஓட்டங்களையும் பெற்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]