கத்தியால் காதை வெட்டி வீசிய நபர்: பீர் திருவிழாவில் பரபரப்பு
ஜேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Wolmirstedt நகரில் இந்த ஆண்டின் பீர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பாதிக்கப்பட்ட நபரும் கலந்து கொண்டு விழாவினை கொண்டாடி வந்துள்ளார். இதனிடையே இளைஞர் கும்பலொன்றுடன் குறிப்பிட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது,
இதில் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் தாம் கருதியிருந்த கத்தியால் குறிப்பிட்ட நபரை நோக்கி வீசியுள்ளார். அது அந்த நபரின் காதை பதம் பார்த்துள்ளது.
இதில் காது துண்டிக்கப்பட்டு விழுந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
தாக்குதல் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூனிச் நகரில் நடைபெறும் இந்த விழாவானது ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை ஈர்த்து வருகின்றது.
அதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருக்கும். இந்த ஆண்டும் வழக்கத்திற்கு மாறாக அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டிருந்தனர். 17 நாட்கள் நீண்டிருந்த இந்த விழா இன்றுடன் முடிவுக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.