கத்தார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர நெருக்கடியானது யுத்தமாக மாறும் ஆபத்து இருப்பதாக ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கெப்பிரியல் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
வளைகுடா நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் கொந்தளிப்பான கசப்பான தன்மையை ஏற்பட்டுள்ளது எனவும் கெப்பிரியல் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் கெப்பிரியல் வளைகுடா நெருக்கடி சம்பந்தமாக சகல நாடுகளுடனும் கடந்த வாரம் முழுவது பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்து கொண்டதுடன் வான் மற்றும் எல்லை வழி தொடர்புகளை துண்டித்து கொண்டன.
இதன் காரணமாக வளைகுடாவில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.