கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மீண்டும் ஏற்பட்ட பதற்ற நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கு மொத்தம் 63 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 13 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பதற்றமான சூழ்நிலைக்குக் காரணமானவர்களை கலைப்பதற்கு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.