‘ஆசிட்’ வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, சபாக் என்ற பெயரில், ஹிந்தியில் படம் தயாராகி வருகிறது. இதில், லட்சுமியாக, தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தை, மேக்னா குல்சார் இயக்குகிறார்.
ஆரம்பத்தில் இந்த படத்துக்கான கதையை கூறுவதற்காக, தீபிகாவின் வீட்டுக்கு வந்த மேக்னா, அரை மணி நேரத்துக்கு மேலாக, கதைச் சுருக்கத்தை உணர்ச்சி பெருக்குடன் விளக்கியுள்ளார். மேக்னா, கதையை கூறி முடித்ததும், தீபிகாவின் கண்களில், கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாம்.
‘கதையை கேட்டதும், என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் தான், அழுது விட்டேன். கண்டிப்பாக இந்த படம், தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்கிறார், தீபிகா.