கண்டி மாவட்டத்தில் பதற்ற நிலமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி, அக்கரணை மற்றும் கடுகஸ்தோட்டைப் பகுதியில் தொடர்ந்தும் வன்முறை தலைதூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், அப் பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காலவரையற்ற பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.