கண்டி மாவட்டத்தின் பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும், நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று(12) காலை 9 மணிக்கு பன்விலை இராஜசிங்க மத்திய கல்லூரி, உளுகங்கை கொஸ்கம சிங்கள பாடசாலை, கலாபொக்க அபிராமி தமிழ் மகா வித்தியாலயம் போன்ற மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.