கண்டியில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற போதும், தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
கண்டியில் இனக்கலவரம் ஏற்பட்டிருந்த நிலையில், அங்குள்ள தற்போதைய நிலைமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை மற்றும் விமானப்படையினர் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸார் மற்றும் பொது மக்களின் வேண்டுகொளுக்கு அமையவே இவ்வாறு அகற்றப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.