கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் இன்றும் (07) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டி – திகன நகரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது அப்பகுதியில் இன்று (07) காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.