கண்சவேட்டிவ் கட்சி கைங்கரியத்தில் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் லிபரல் கட்சி – கனடாவில் தமிழர்களால் ஒரு திருப்பு முனை
Pragmatic Conservative என்ற பரிமாற்ற மாற்றத்திற்கு பழமைவாத கட்சியான Progressive Conservative Partyஐ கொண்டு வந்ததின் மூலம் புதியதொரு திருப்புமுனையை திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.
அதிலும் இந்த மாற்றத்தின் ஆரம்பமாக தமிழர்கள் வாழும் தொகுதிகளில் அவரது கட்சியில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் முண்டியடித்துப் போட்டியிடுவதும்,
அண்மையில் Scarborough-Rouge river இடம்பெற்ற இடைத்தேர்தலொன்றில் தமிழ் வாக்களர்களின் ஆதரவால் றேமண்ட் சோ என்ற வேட்பாளர் வெற்றிபெற்றதும்,
தமிழர்கள் லிபரல் கட்சியை விட்டு கண்சவேட்டிவ் கட்சிக்குத் தாவி விட்டார்களா என்ற பயமும் லிரபல் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அந்தப் பயம் காரணமாக லிபரல் கட்சியின் ஆதரவில் இதுவரை காலம் தங்கள் ஆதரத்தைக் கடத்தி வந்த சில அடிவருடிகள் இந்த அதிர்ச்சியின் பாதிப்பைத் தாங்க முடியாமல்,
திரு.பற்றிக் பிறவுன் சார்ந்த தமிழர்களை குறி வைப்பதும், தவறான கருத்துக்களை முகப்பதிவுப் புத்தகங்கங்களில் பதிப்பதும், குறிப்பாக சிறீலங்கா அரசின் ஊதுகுழலாக இருக்கும் கே.பி. என்ற கைதியின் இரத்த உறவுகளின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.
இருந்த போதும், இதுவரை லிபரல் கட்சிக்கு ஆதரவாக இருந்த பல முக்கிய தமிழ்த் தலைவர்களும், ஆதரவாளர்களும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றி அடுத்த ஆட்சியை அமைக்கப் போகும் திரு.பற்றிக் பிறவுன் அவர்களின் அணியோடு இணைத்துள்ளார்கள்.
இந்த நிலை சகல பிரதேங்களிலும் தொடரப் போவதாக இருந்தாலும், திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் அரச நிறுவனங்களின் இயக்குனர் சபைக்கு தகுதியுள்ள சகலரிற்கும் இனபேதமற்ற முறையில் அங்கத்துவம் தருவேன் என்ற உறுதிமொழியை அளித்ததும்,
தமிழர்களில் மாகாணசபை உறுப்பினர்களாக தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் மூவரில் ஒருவருக்கு அவர்களின் தகுதிகளை ஆராய்ந்து அமைச்சர்ப் பதவி வழங்குவேன் என்று குறிப்பிட்டதும் இங்கு நோக்கத் தக்கது.
இவ்வாறானதொரு அதிர்ச்சித் தோல்வியை எதிர்பார்க்காத லிபரல் கட்சியின் ஆத்மார்த்த பிரச்சாரவியலாளர்கள் கண்சவேட்டிவ் கட்சியின் பொறுப்புக்களிலுள்ள தமிழர்களை மிரட்டும் பாணியிலான சமூகவலைப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு தேர்தல்களின் போதும் பணம் வாங்கி வேட்பாளர்களிற்கு வாக்குறுதிகளையும் வழங்கி, தாங்கள் வழங்கிய உறுதிமொழிகளில் எதனையும் செய்யாத சிலரே இந்தப் பணியில் சிரமாக ஈடுபட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.
: