கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றில், மனைவி கணவனைக் பொல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அந்தப் பொல்லுடன் மனைவி பொலிஸ் நிலையத்தில் சரடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வென்னப்புவ பகுதியில் நேற்று இரவு நடந்தது.
அதிக மது போதையில் இருந்த கணவன், தன்னைப் பொல்லால் தாக்க முற்பட்ட போது, அவரைத் தடுத்து தான் கணவனைப் பொல்லால் தாக்கினார் என்று மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.