அண்மையில் விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக கட்டுநாயக்க விமான நிலைத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானம் தொடர்பில் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரம் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் வழங்கப்படவுள்ளது.
விமான பொறியியலாளர்களுடனான குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் தீர்மானத்திற்கு வர முடியும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் ஜெனரால் எச்.எம்.சி.நிமலசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரிடம் காணப்பட்ட சிகரெட் பற்ற வைக்கும் லைற்றலிருந்து புகை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிடைக்கவுள்ள அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் சம்பவத்தினால் ஏற்பட்ட நட்டம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 20ம் திகதி தாய்லாந்தில் இருந்து டோகா நோக்கி பயணித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட புகை காரணமாக குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் 208 பயணிகள் மற்றும் 15 ஊழியர்களும் பயணித்துள்ளனர்.
இது போயிங் 787 – 800 ரக பாரிய விமானம் ஒன்றாகும். அத்துடன் போயிங் ரக விமானங்களுக்குள் மிகப்பெரிய விமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.