கட்டவிழ்த்து விடப்பட்ட மத்தியுவின் கோபம் கனடாவின் கிழக்கு கரையோர பகுதிகளை நாசப்படுத்தியுள்ளது.
கனடா-மத்தியுவின் கோபம் கனடாவின் கரையோர பகுதிகளை தாக்கியுள்ளது.ஆயிரக்கணக்கான கரையோரப்பகுதி மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.பலத்த மழை காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டன. பலத்த மழை வலுவான காற்று பிரதேசத்தை திங்கள்கிழமை பலங்கொண்டு அடித்துள்ளது
நோவ ஸ்கோசிய நிலப்பகுதிகளின் பெரும்பாகத்தில் 100-மில்லி மீற்றர்களிற்கும் அதிகமான மழை பெய்துள்ளதென கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது. சில பகுதிகளில் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
உக்கிரமான கால நிலை வெள்ளப்பெருக்கு மின்கம்பங்கள் முறிவு மற்றும் வீதிகளை அடித்து சென்றமை போன்ற அனர்த்தங்களை உண்டுபண்ணியுள்ளது.
144,000 ற்கும் மேற்பட்ட நோவ ஸ்கோசிய வாடிக்கையாளர்கள் மற்றும் பிரின்ஸ் எட்வேட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். இதனால் நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
நியு பவுன்லாந் மற்றும் லப்றடோர் புயலின் சீற்றத்திற்கு முகம் கொடுத்துள்ளன. பலத்த மழை புயல் காரணமாக அவசர கால நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ் கனடா நெடுஞ்சாலை சில பகுதிகளில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளது.
636 total views, 160 views today