கடைசி டெஸ்டில் கவுதம் கம்பீர்: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா
முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள இந்தியா, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஆவலுடன் உள்ளது.
துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி கடைசிப் போட்டியிலும் நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
தவான் காயத்தால் விலகியதால் முரளி விஜய்யுடன் காம்பீர் தொடக்க வீரராக களமிறங்குகிறார். 2 ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்.
தவிர, புஜாரா, ரோஹித் சர்மா, முரளி விஜய் ஆகியோர் துடுப்பாட்டத்திலும், அஸ்வின், ஜடேஜா, ஷமி ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலைமையில் உள்ளனர்.
புவனேஸ்வர்குமார் காயம் அடைந்து ஆடாததால் அவர் இடத்தில் உமேஷ் யாதவ் இடம் பெறலாம்.
நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் காய்ச்சல் காரணமாக கொல்கத்தா டெஸ்டில் விளையாடவில்லை.
அந்த அணியில் துடுப்பாட்டத்தில் ரோஞ்சி, டாம் லாதம், பந்துவீச்சில் சான்ட்னெர், போல்ட்0020ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
2 போட்டியிலும் தோற்று தொடரை இழந்த நியூசிலாந்து இந்த டெஸ்டிலாவது வென்று ஆறுதல் அடைய வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.