நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டத்தை வரட்சி வாட்டி வருகின்றது
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 335 குடும்பங்களை சேர்ந்த1121 பேருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான குடிநீர் விநியோகத்தை மாந்தை கிழக்கு பிரதேச சபை ஊடாக நாடாத்தி வருவதாகவும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்
இதற்கமைவாக பொன்னகர் கிராம சேவையாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 55 பேரும் செல்வபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 60 பேரும் பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 35குடும்பங்களை சேர்ந்த 98 பேரும் பாண்டியன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 260பேரும் பாலிநகர் கிராம சேவையாளர் பிரிவில் 38 குடும்பங்களை சேர்ந்த 135 பேரும் கரும்புள்ளியான் கிராம சேவையாளர் பிரிவில் 35 குடும்பங்களை சேர்ந்த 120 பேரும் விநாயகபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 65குடும்பங்களை சேர்ந்த 230 பேரும் கொல்லவிலான்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 10குடும்பங்களை சேர்ந்த38 பேரும் அம்பாள்புரம் கிராம சேவையாளர் பிரிவில் 42 குடும்பங்களை சேர்ந்த 125 பேருமாக மொத்தமாக 335குடும்பங்களை சேர்ந்த 1121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்
இந்நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாளொன்றுக்கு 12000 லீற்றர் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள பெரிய நீர்ப்பாசன குளமான வவுனிக்குளத்தில் தற்போது நீர் வற்றிவருகிறது இதன்காரனத்தால் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுகளுக்குள் அடங்குகின்ற 20 கிராமங்களில் சுமார் 8000 ஏக்கர் வயல் நிலங்கள் சிறுபோக நெற்செய்கை செய்யப்படாது உள்ளதாகவும்
பிரதானமான தொழிலான விவசாயம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை கால்நடை வளர்ப்பிலும் பாரிய சிக்கலை எதிர்கொள்வதாகும் கால்நடைகளுக்கு நீர் இல்லது அவை இறக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் தற்போது எமது பகுதியிலுள்ள சிறிய குளங்கள் நான்குமுற்றாக வற்றியுள்ளதாகவும் இவ்வாறு நிலைமை நீடிக்குமானால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கிணறுகளில் நீர் வற்றி செல்வதால் அவற்றை குடிப்பதால் சிறுநீரக நோய்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய தரப்பினர் மக்களுக்கு தெளிவுகளை வழங்கவேண்டும் எனவும்
தற்போதைய எமது நிலைதொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் கூறியும் யாரும் கவனமெ டுப்பதாக தெரியவில்லை எனவும் தொடரும் வறட்சியால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் எமது நிலை தொடர்பில் கவனமெடுக்குமாறும் மனித உரிமை செயற்ப்பாட்டாளரான பரமானந்தம் தெரிவிக்கின்றார்