நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுள் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.7 செல்சியஸ் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவானதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
32.7 செல்சியசாக அது பதிவாகியுள்ளது.
நாட்டின ஏனைய பிரதேசங்களில் இரவு வேளையில் வெப்பநிலை சாதாரண நிலையை விட சிறிதளவு குறைந்து காணப்பட்டதாக காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.