மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பளுகஸ்வெவ மற்றும் கல்ஓயாவிற்கு இடையில் மட்டக்களப்பு நோக்கி நேற்றிரவு(சனிக்கிழமை)பயணித்த கடுகதி ரயிலில் யானையொன்று மோதியுள்ளமை காரணமாக குறித்த ரயில் தடம்புரண்டுள்ளது.
இந்தநிலையில், ரயிலுடன் மோதியதில் யானை உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், திருகோணமலை வரை பயணித்த இரவு நேர தபால் ரயில் கெக்கிராவ ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்கமுவ மீ ஓய பாலத்திற்கு அருகில் ரயிலுடன் மோதி யானையொன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு யானை பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.