ஹவாயில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததில் லாவா குழம்பு சிதறி கப்பலில் பயணித்த 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாய் தீவுகள் மத்திய பசுபிக் கடலில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் அடிக்கடி எரிமலைகள் வெடித்து லாவா குழம்புகள் சிதறுகின்றன. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இங்கு சுமார் 13 முறை எரிமலை வெடித்து மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
ஹவாய் தீவின் கடலுக்கு அடியில் கிலாயூ எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை ஏற்கனவே வெடித்ததில் அந்த கடற்கறைப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அந்தப் பகுதியை காலி செய்துக் கொண்டு வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். கடலில் கப்பல் போக்குவரத்து நடந்துக் கொண்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த கிலாயு எரிமலை வெடித்து லாவா குழம்பை சிதறி அடித்தது. அப்போது கப்பல்கள் அங்கு சென்றுக் கொண்டிருந்தன. அந்த கப்பலில் பயணம் செய்துக் கொண்டிருந்த 23 பேர் மீது லாவா குழம்புகள் விழுந்ததில் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த அதிர்வில் ஆளில்லாத இரு கப்பல்கள் ஒன்றோடொன்று மோதி சேதம் அடைந்துள்ளன.