முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோத்தபாய கடற்படை முகாமுக்கு காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருகை தந்த போது அந்த இடத்தில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது கடற்படை முகாமுக்குள் கலகம் அடக்கும் கடற்படையினரும் வரவழைக்கப்பட்டு இருக்கின்றனர்.