கிருஸ்துமஸ் வார விடுமுறையை முன்னிட்டு கடன் அட்டைகளில் பொருட்கள் வாங்கும் பரிவர்த்தனைகள் வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது.
கிருஸ்துமஸ் நாளின் முந்தைய நாட்களான சனிக்கிழமை ஒரு நாளில் இந்த புதிய சாதனை படைக்கபட்டுள்ளது. அன்றைய ஒரு நாளில் (டிசம்பர் 23) பிரான்சில் மட்டும் 45.473 மில்லியன் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த Black Friday நாளில் இடம்பெற்ற பரிவத்தனைகளை விட மிக மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களிலும் இணையத்தளங்களிலும் மக்கள் அதிகளவாக பொருட்களை தொடர்ச்சியாக வாங்கிய வண்ணம் உள்ளனர். அதேவேளை பல நிறுவனங்களும் இந்த விடுமுறை காலத்தில் பல விலைச் சலுகைகளை அளித்து வருகின்றனர்.
இந்த வருடத்தில் இந்த பரிவர்த்தனைகள் நான்காவது தடவையாக சாதனை படைத்துள்ளது. தவிர இந்த எண்ணிக்கையானது நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.