கடத்தல் பற்றிய சிந்தனையை கடலாய் விரித்து நீந்துகையில்
கரையின் வெற்றி கண்ணில் பூக்களாகிறது
கடத்தல் ஒரு அற்புத யுத்தி
கடத்தல் ஒரு அற்புத வித்தை
கடத்தல் ஒரு அற்புத மருந்து
கடத்தல் ஒரு அதிசய வழி
வெற்றி பற்றும் தருணந்தோறும்
ஆணவம் அணைக்கிறது ஆன்மாவை
எல்லாவற்றையும் வென்று விட வேண்டுமென்கையில்
இயமனக்கும் கொன்றுவிட வேண்டும் போலாகுமாம்
யாரை
எங்கே
எப்படி
எதற்காக வெல்ல வேண்டும் என்பதிலேதான்
வாழ்வின் சூட்சுமமும் ஞானமும் விருட்சமேகிறது
குழந்தையை வெல்ல தாய் நினைப்பதில்லை
குருவை வெல்ல சீடன் நினைப்பதில்லை
காலத்தை வெல்ல ஞாலம் நினைப்பதில்லை
விதியை வெல்ல மதி நினைப்பதில்லை
வென்றால் அதுவும் விதியே
சொல்லில் குறைவு இல்லை
கடந்து போன நினைவுப் பேனையால்
எழுதும் எழுத்தில்
புனித ஆத்மம் பேசும்
நீ வாழ்வில் பலவற்றை கடப்பாயாயின்
உன் சுகத்தை உடுப்பாய் நாளுமென
எழுதிக் கொண்டிருக்கிறான் வாழ்வில் தோற்றவன்
நேற்று சாகணும் என நினைத்த எதிரி
இன்று அவனுக்கு குருதி தருகையில்
அவனை வெல்வதை விட
அழுக்கைக் கடப்பதே மேலென
எழுதி விழுகிறது விதையாய் விளையும் சிந்தனை
எல்லாவற்றையும் வெல்ல நினைக்காதே
வெற்றியை விட கடந்து போதல்
சமுத்திரைத் துளியாக்கும் உன்னத மென்பேன்.
த.செல்வா
இரவு 11.22
திருவையாறு
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]