கேரளக் கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில், மதுவரித் திணைக்கள அதிகாரியொருவர், மட்டக்களப்பு மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளாார்.
சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் புத்தகப்பை ஒன்றில் வைத்து, கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற போது, மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.பீ.றோகன தலைமையாலான பொலிஸ் குழுவினர் அவரைக் கைது செய்தனர்.
சந்தேகநபர் மதுவரித் திணைக்கள மட்டக்களப்பு தலைமையத்தில் பணிபுரிபவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.