நாட்டின் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் முதலீடு தொடர்பாக தேவையான சட்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிசக்தி வளங்களை தேடுவதற்கும் நாட்டிற்கு முக்கிய முதலீடுகளை கொண்டு வருவதற்கும் இலங்கை தயாராகி வருகிறது.
எனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 900 கடல் பகுதிகளுக்கு இரண்டு வருட எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு உரிமங்களை வழங்க திர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.