பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட்டின் நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேன திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின், இன்றைய அமர்வில் சாட்சியமளிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியாளர்களின் பின்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்தினால், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட்டின் நிறைவேற்று அதிகாரியே, வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய சாட்சியத்தை, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பெர்ணான்டோ, நெறிப்படுத்துவார்.