ஓபிஎஸ் வைத்த அதிரடி செக்: நாளை சசிகலா சொல்லப்போகும் பதில் என்ன?
அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால் டிடி தினகரன் பெங்களூரு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம் அதிமுக சட்டத்திட்டப்படி தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக தற்காலிக பொதுச்செயலாளராக யாரையும் நியமிக்கவும் முடியாது என்பதை எம்ஜிஆர் அதிமுக-வை உருவாக்கிய போதே விதிமுறைகளில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனால் இந்த மனுவிற்கு சசிகலா உரிய பதில் அளிக்க வேண்டும் என்று, கடந்த 17 ஆம் திகதி தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து சசிகலாவை பெங்களூர் சிறையில் வைத்து, டி.டி.வி.தினகரன் சந்தித்து ஆலோசித்ததாகவும், தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிப்பதற்கான வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இன்றைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை தயார் செய்து, அதில் சசிகலாவின் கையெழுத்தை பெறுவதற்காக இன்று மாலை டிடிவி.தினகரன் பெங்களூரு செல்வார் என்று கூறப்படுகிறது.