ஓன்றாரியோவில் தேர்தல் நடந்தால் பற்றிக் பிறவுனின் கட்சியே ஆட்சியமைக்கும் – ரொறன்ரோ ஸ்ரார்
இப்போது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் இடம்பெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கான கருத்துக் கணிப்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான கௌரவ பற்றிக் பிறவுன் தலைமையிலான கட்சிக்கே வாக்களிப்போம் எனப் பெரும்பாண்மையோர் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த மககளில் 42 வீதமானவர்கள் பற்றிக் பிறவுனின் கண்சவேட்டிவ் கட்சிக்கே ஆதரவு வழங்குவோம் எனத் தெரிவித்துள்ள அதேவேளை, லிபரல் கட்சிக்கு 35 விழுக்காடும், புதிய ஜனநாயகக் கட்சிக்கு 17 வீதத்தினரும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருந்திருந்தனர்.
இந்த வாக்கு வீதம் கடந்த கால கருத்துக் கணிப்பு வாக்குளிலிருந்து கண்சவேட்டிவ் கட்சியை மேலேழ வைத்துள்ளது என்பதையும், 2018ம் ஆண்டுத் தேர்தல் பற்றிய கட்டியத்தைக் கூறுவதாகவும் இருக்கின்றது என நம்பப்படுகின்றது.
யார் ஒன்றாரியோவின் முதல்வராகத் தெரிவாவதற்கு சிறந்தவர் என்ற கேள்விக்கான தெரிவாக பற்றிக் பிறவுனை 26 வீதத்தினர் தெரிவு செய்துள்ளனர். தற்போதைய முதல்வரை 16 வீதமானவர்களும், புதிய ஜனாநாயகக் கட்சியின் தலைவர் 15 வீத விருப்புக்களையும் பெற்றனர்.
இதேவேளை விரைவில் வரப்போகும் ஸ்காபரோ ரூச்ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலிற்கான பணிமணையைத் இந்த வார நடுப்பகுதியில் கௌரவ பற்றிக் பிறவுன் அவர்கள் திறந்து வைத்தார்.
பல இனங்களைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
: