தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்தது. திருமண கோஷ்டியினர் இதில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.