ஓடு தளத்தில் இறங்கிய பின்னர் தள்ளாடிய விமானம்?
கடந்த இரவு ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் 112 பயணிகளை தாங்கி வந்த விமானம் தரையிறங்கிய பின்னர் திசைமாறிய சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து போக்குவரத்து பாதுகாப்பு சபை புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளது.
ஹலிவக்சிலிருந்து வந்த எயர் கனடா விமானம் பியர்சனில் நடு இரவிற்கு சிறிது பின்னர் தரையிறங்கியது.
விமானம் தரை தட்டிய சமயம் அதன் இறங்கும் கியரின் பகுதி ஒன்று புல்தரை பகுதி ஒன்றின்மேல் திசை திரும்பி மீண்டும் ஓடு தளத்திற்கு திரும்பியதாக எயர்கனடா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
விமானம் சிறிது சேதமடைந்துள்ளதோடு அதன் பின்புற தரையிறங்கும் கியர் சம்பவத்தை தொடர்ந்து சேற்று பகுதிக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விரைவாக பேரூந்து மூலம் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். எவரும் காயமடைந்ததாக தெரியவில்லை. ஆனாலும் பயணிகள் கிட்டத்தட்ட அரை மணித்தியாலங்கள் விமானத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஒரு அதிர்ச்சிகரமான அனுபவமென பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.பலத்த சத்தம் மற்றும் குலுங்கலுடன் தாங்கள் மிக மிக கடினமாகவும் துரிதமாகவும் அடிபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற ஓடுதளம் விசாரனைக்காக மூடப்பட்டுள்ளது.