ஓடும் பேருந்தில் 17வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 78 வயது முதியவர் கைது
ரொறொன்ரோவில் ஓடும் பேருந்தில் 17 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற, 78 வயது முதியவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் குறித்த சம்பவம் சம்பவித்துள்ளது.
Yi Chul Chung என முதியவரின் பெயரை வெளியிட்டுள்ள பொலிஸார், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் உடனடியாக தங்களை தொடர்புக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த 17 வயது சிறுமி, அருகில் அமர்ந்து வந்த 78 வயதான முதியவர் சிறுமியை நோக்கி ஆபாசமான செய்கைகளை காட்டியதாகவும், பின்னல் முதியவர் திடீரென சிறுமி மீது பாலியல் தாக்குதலை நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த முதியவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, இதே வழி சாலையில் ஒரு பெண்ணிடம் அவர் ஏற்கனவே தகாத முறையில் நடந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.