புகைப்பிடித்தல் உயிருக்கு கேடு என ஒவ்வொரு சிகரெட்டிலும் பொறிக்கவேண்டும் என அமெரிக்காவில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. புகைப்பிடித்தல் தொடர்பாகவும், புற்றுநோய் குறித்தும் பல்வேறு நாடுகள் தொடர்ந்து விவாதித்து வருகின்றன.
இதன் ஒருபகுதியாக இந்தியாவில் விற்பனையாகும் சிகரெட் அட்டைகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு சிகரெட்டிலும், புகைப் பிடித்தல் உயிருக்குக் கேடு விளைவிக்கும் என அச்சிடப்பட வேண்டும் என ஸ்டர்லிங் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடம் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என பல்கலைக்கழக ஆசிரியர், மாணவர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.