பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்து வெளிவந்துள்ள ‘சாஹோ’ படம் பிரெஞ்ச் படமான ‘லார்கோ வின்ச்’ என்ற படத்திலிருநது காப்பியடிக்கப்பட்டதுதான். அது குறித்து அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி மூன்று தினங்களுக்கு முன்பே, “இந்தியாவில் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் என நினைக்கிறேன்,” என கிண்டலடித்து பதிவு போட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து நேற்றும் அவருடைய டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். “முதல் முறையை விட இந்த இரண்டாவது முறையும் ‘லார்கோ வின்ச்’ன் இலவச தயாரிப்பு. தெலுங்கு இயக்குனர்களே, என்னுடைய வேலையைக் காப்பியடித்தால் குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடியுங்கள். இதற்கு முன் என் ‘இந்திய எதிர்காலம்’ பற்றி பதிவு முரணான ஒன்று தான். மன்னிக்கவும், ஆனால், உங்களுக்கு நான் எந்த உதவியும் புரிய முடியாது,” என்று பதிவிட்டுள்ளார்.
பிரெஞ்ச் இயக்குனரின் இந்த ‘காப்பி’ பற்றிய பதிவு தெலுங்கு இயக்குனர்களுக்கு ஒரு அவமானகரமான விஷயம்தான்.