ஒளியைப் பயன்படுத்தி பிரிண்ட் எடுக்கும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் அசத்தல்!
கணினியினைப் பயன்படுத்தி செயலாற்றும்போது அனேகமான விடயங்களில் பிரிண்ட் எடுத்தல் என்பது இன்றியமையாததாக காணப்படுகின்றது.
எனினும் தற்போது உள்ள பிரிண்ட் தொழில்நுட்பங்கள் சற்று விலை கூடியவையாகவே காணப்படுகின்றன.
இப்படியிருக்கையில் மிகவும் குறைந்த செலவில் பிரிண்ட் எடுக்கும் தொழில்நுட்பத்தினை அமெரிக்கா மற்றும் சீன ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
அதாவது விசேட நனோ துணிக்கைகளை தாள் ஒன்றில் செலுத்தி கழி ஊதாக்கதிர்களைப் பட வைக்கும்போது எழுத்துக்கள் அல்லது படங்கள் பிரிண்ட் ஆகக்கூடிய தொழில்நுட்பமே இதுவாகும்.
இதன்போது வெப்பநிலையை 120 டிகிரி செல்சியஸ் வரை மாற்றும்போது வெவ்வேறு வர்ணங்களினால் ஆன பிரிண்ட்களும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
இதில் நனோ துணிக்கைகளாக பிரஸ்ஷியன் நீலம், டைட்டேனியம் டை ஒக்சைட் (TiO2) என்பன பயன்படுத்தப்படுகின்றன.
இவ்விரு நனோ துணிக்கைகளையும் ஒன்றாக கலக்கும்போது நீல நிற தாள் பெறப்படும்.
அதன் பின்னர் கழி ஊதாக கதிர்களை செலுத்தும்போது எழுத்துருக்கள் தவிர்ந்த ஏனைய பகுதி வெள்ளை நிறமாக மாறும்.
இவ்வாறே அச்சுப்பதித்தல் இடம்பெறுகின்றது. இச் செயன்முறையினை கீழுள்ள படத்தில் காணலாம்.