தாவரங்கள் தமக்கு தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்வதற்கு ஒளித்தொகுப்பு செயன் முறையானது இன்றியமையாததாகும்.
அதுமட்டுமன்றி சூழலில் ஒட்சிசன் வாயுவின் அளவினை மாறாது பேணுவதற்கும் இச் செயன் முறை முக்கியத்துவம் பெறுகின்றது.
இது ஒரு இயற்கையான செயன் முறையாகும். எனினும் இதனை பயன்படுத்தி செயற்கை முறையில் எரிபொருளை தயாரிப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அதாவது இச் செயன்முறையில் பயன்படுத்தப்படும் கட்புலனாகும் ஒளியினைக் கொண்டு எரிபொருளை தயாரிப்பதற்கான ஆய்வுகள் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசேடமாக மீதேன் வாயு இச் செயன்முறையின் ஊடாக தயாரிக்கப்படவுள்ளது.
இம் முயற்சி வெற்றியளிக்கும்பட்சத்தில் குறைந்த செலவில் எரிபொருளை உற்பத்தி செய்ய முடிவதுடன், தூய்மையான சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.