ஒலிம்பிக் ஹொக்கி: நெதர்லாந்திடம் தோல்வி! காலிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா!
ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹொக்கி லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.
ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹொக்கியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது.
போட்டியின் முதல் இரண்டு பாதியிலும் இரு அணியினரும் கோல் போடவில்லை, இதனால் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருந்தது.
போட்டியின் 32வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ரோஜியர் ஹாஃப்மன் கோல் அடித்தார். 38வது நிமிடத்தில் இந்திய வீரர் ரகுநாத் வக்காலிகா கோல் அடித்து சமன் செய்தார்.
போட்டியின் 54வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மின்க் வான் டெர் கோல் அடிக்க நெதர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடியும் கடைசி வினாடியில் இந்தியாவிற்கு ஷாட் பெனால்டில் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இந்தியா வீணடித்தால் 2-1 என தோல்வியை தழுவியது.
இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது.
இதுவரை முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பி பிரிவில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
பி பிரிவில் ஆறு அணிகள் உள்ளன. முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்தியா காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. அயர்லாந்து, கனடா அணிகள் வெளியேற்றம் அடைந்துள்ளன.