ஒலிம்பிக் வில்வித்தை: கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையின் ரீ-கர்வ் பிரிவில் இந்திய மகளிர் அணி, கொலம்பியா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய அணியினை 5-3 (52-51, 49-50, 52-52, 52-40) என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்த வெற்றியை பெற்றது.
இந்திய அணியின் மகளிர் பிரிவு வில்வித்தை வீராங்கனைகள் தீபிகா குமாரி, எல். மஜ்ஜி மற்றும் பி. லைஷ்ராம் ஆகியோரை கொண்ட குழு காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
காலிறுதியில் இந்திய மகளிர் அணி ரஷ்யாவை சந்திக்கவுள்ளது.