ஒலிம்பிக் பதக்கத்தை தானமாக அளித்த மாமனிதர்! எதற்காக தெரியுமா?
போலந்து நாட்டை சேர்ந்த 33 வயதான மலா சாவ்ஸ்கி ரியோ ஒலிம்பிக்கலில் வட்டு எறிதல் போட்டியில் 67.55 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இவருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் தனது 3 வயது மகன் ஓலெக், கடந்த 2 ஆண்டுகளாக கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நியூயார்க்கில் மேல் சிகிச்சை செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்றும் எழுதப்பட்டிருந்தது.
உடனே இதன் உண்மைநிலையை கண்டறிந்த மலா சாவ்ஸ்கி, குழந்தையின் சிகிச்சைக்காக தான் ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப்பதக்கத்தை தானமாக அளித்துள்ளார்.
இதுகுறித்து மலா சாவ்ஸ்கி கூறுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்ல கடினமாக போராடினேன்.
ஆனால் இன்று அதைவிட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுக்காக நான் மக்களிடம் உதவி கேட்கிறேன். சிறுவனின் உடல் நலத்திற்காக அனைவரும் உதவ வேண்டும்.
எனது ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம், ஒலெக்கிற்காக தங்கத்தைவிட மதிப்புமிக்கதாக மாறியுள்ளதில் மகிழ்ச்சி அடைந்துள்ளளேன் என கூறியுள்ளார்.