ஒலிம்பிக் கிராமத்திற்குள் இரு விளையாட்டு வீரர்கள் உட்பட ஏழு புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் செவ்வாயன்று தெரிவித்துள்ளனர்.
ஜூலை முதலாம் திகதி முதல் ஒலிம்பிக் விளையாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 155 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திங்களன்று டச்சு டென்னிஸ் வீரர் ஜீன்-ஜூலியன் ரோஜருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் போட்டிகளிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
டோக்கியோவில் தரையிறங்கிய பின்னர் கொவிட்-19 தொற்றால் செக் குடியரசு, அமெரிக்கா, சிலி, தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணி வீரர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.