கடந்த காலத்தைப்போல இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி பலப்படுத்த உங்களால் இயலும்.
இலங்கை தமிழசுக் கட்சியின் தலைவராக பெரும் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்ட எனது அன்புக்குரிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
பொதுச்சபை உறுப்பினர்களின் பெரு ஆதரவு மாத்திரமின்றி உலகத் தமிழர்களின் எழுச்சியான ஆதரவுடனும் நீங்கள் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளீர்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.
தமிழ் மக்களின் தலைமைத்துவம், மக்கள் பிரதிநிதித்துவம் சிதைந்து பலவீனமாக்கப்பட்டுள்ள தருணத்தில் உங்கள் வருகை என்பது எல்லோருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற முதுமொழிக்கு இணங்க நாம் ஒற்றுமையுடன் பயணிப்பதன் வாயிலாகவே உரிமையையும் நீதியையும் வென்றெடுக்க முடியும்.
அதனை தாங்கள் இலக்காக கொண்டு செயற்பட்டு தமிழின விடுதலைக்கு உழைக்க வேண்டும் என்று தயவோடு வலியுறுத்தி தங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்தி நிற்கின்றேன்.
அன்புடன்
‘ஊடகப் போராளி’ கிருபா பிள்ளை