கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,844 ஆக உயர்வடைந்துள்ளது.
இவற்றில் மே 10ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 15 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
கட்டான, உடுவெல, மாவனல்லை, அரநாயக்க, மாளிகாவத்தை, ஏறாவூர்-2, கடவத்தை, மொரட்டுவை, அலுபோமுல்ல, வாத்துவ, வலஸ்முல்ல, கொலவேனிகம, கொழும்பு 15, ஜா-எல, வத்தளை, பத்கமுல்ல, தலாத்துஓயா, பதுளை, கிளிநொச்சி முதலான பகுதிகளில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நிக்கவெரட்டிய, மரதன்கடவல, மதவாச்சி, அத்துருகிரிய, எல்பிட்டிய, கரந்தெனிய, பெரியநீலாவணை, கந்தளாய், மாத்தளை, ரத்தோட்டை, ஹொரம்பல்ல, பட்டுகொட, வேயங்கொடை, கண்டி, அக்குரணை, உடிஸ்பத்துவ, லுனுவத்த, தோரப்பிட்டிய, மஹியங்கனை, றாகம, கொழும்பு 13, கந்தானை, அவிசாவளை, வத்துபிட்டிவல, பன்னிபிட்டி, வக மற்றும் மாரவில பகுதிகளிலும் மரணங்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.