ஒரே நாளில் 27 முறை மாரடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரித்தானியர்: நடந்தது என்ன?
பிரித்தானியாவில் நபர் ஒருவர் தொடர்ந்து 27 முறை மாரடைப்பால் அவதியுற்றும் வியக்கத்தவகையில் உயிர் பிழைத்துள்ள சம்பவம் விடப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Wednesbury பகுதியை சேர்ந்தவர் 54 வயதான Ray Woodhall. கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்ட இவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கிண்ணங்கள் பல பரிசாக பெற்றுள்ளார்.
இந்த நிலையில் Kidderminster பகுதியில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார் ரே. அப்போது முதன் முறையாக இவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அதை பொருட்படுத்தாமல் விளையாட்டில் கவனம் செலுத்திய ரே மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
உடனடியாக மருத்துவ குழுவினரை அங்கிருந்த நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதில் விளையாட்டு பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் விரைந்து வந்து இவருக்கு முதலுதவிகளை வழங்கியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் வைத்து பரிசோதனை துவங்கும் முன்னரே மீண்டும் இரு முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமடைந்திருக்கும் இவரது நிலை கண்டு அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே இவருக்கு coronary angioplasty சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயாரானபோது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். பலமுறை இருதம் நின்று துடித்துள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கும், இதனால் இவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவு என அவர் அஞ்சியுள்ளனர்.
அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் இவருக்கு 27-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது மருத்துவமனையில் இவரை சேர்ப்பித்த 24 மணி நேர இடைவெளியில் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறை இவருக்கு மாரடைப்பு ஏற்படும்போதும் மார்பில் அழுத்தம் தருவதற்காக மெதுவாக குத்திய செவிலியர் ஒருவர் ரே இடம் மன்னிப்பு கேட்டுள்ளதை நினைவு கூர்ந்த இவர், அவர் எனது உயிரை திருப்பிக் கொண்டு வரவே தொடர்ந்து முயன்றுள்ளார்.
தற்போது மருத்துவமனை சிகிச்சைகள் முடித்து வீட்டில் ஓய்வு எடுத்துவரும் ரே, தொடர்ந்து 27 முறை ஒரே நாளில் மாரடைப்பு ஏற்பட்டதால் தமது இருதயம் 25 சதவிதம் செயலிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சிறுகச் சிறுக உடல் தேறி வருவதாக குறிப்பிட்ட ரே, தற்போது தனது அலுவலகத்திலும் செல்லத் துவங்கியுள்ளார். ஆனால் தம்மால் கால்பந்தாட முடியவில்லையே என்ற ஒரே வருத்தம் மட்டுமே தற்போது இருப்பதாக தெரிவித்துள்ள ரே, மிக விரைவில் அந்த ஆசையும் ஈடேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.