ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் கொடிய நெடுஞ்சாலை விபத்தில் கொல்லப்பட்டனர்!
கனடா- கடந்த வாரம் பேரழிவை ஏற்படுத்திய நெடுஞ்சாலை 400 விபத்தில் கொலையுண்ட நால்வரில் 5வயது சிறுமி அவளது தாய் மற்றும் பேத்தியார் ஆகியவர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்போனா சமீபத்திய Seneca college பட்டதாரியாவர்.
கனடா வொன்டலான்டிற்கு சென்று விட்டு வீடு திரும்புகையில் விபத்து நடந்துள்ளது.இவர்களுடன் சென்ற இவரது சகோதரியும் அவரது குழந்தையும் வேறு வாகனத்தில் சென்றதால் அவர்களிற்கு எதுவும் ஏற்படவில்லை.
35-வயதுடைய வெல்போனா வொக்ஷி அவரது ஐந்து வயது மகள் இசபெல்லா மற்றும் 55வயதுடைய பேத்தி ஷிமைல் வொக்சி மூவரும் அவர்களது காரில் இருந்த சமயம் நெடுஞ்சாலை 400 செப்பேர்ட் அவெனியுவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாரிய மோதலில் அகப்பட்டுக்கொண்டது.
மூன்று போக்குவரத்து லாரிகள் உட்பட 11வாகனங்கள் கனல் தெறிக்கும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக புலன் விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலையுண்ட நாலாவது நபர் குறித்த தகவல்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.
“நிச்சயமாக தடுக்ககூடியதும்”, “முற்றிலும் சோகமானதுமான” மோதல் என விபத்து குறித்த புதிய விபரங்களை ஊடகங்களிற்கு தெரிவிக்கையில ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட கெரி சிமித் தெரிவித்தார்.இத்தகைய பாரிய மோதலை தான் இதுவரை காணவில்லை எனவும் கூறியுள்ளார்.
மோதலிற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் போக்குவரத்து லாரி ஒன்றின் வேகம் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறினார்.
குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை.