நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஒரு வருடத்திற்கு எம்.பி.க்குரிய சம்பளத்தை பெறமாட்டேன் என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதம் கையளித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை நேற்று வியாழக்கிழமை பாராளுமனற செயலாளர் நாயகத்திடம் அவர் கையளித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ எம்.பி தற்போதைய எம்.பி.க்கள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சில தியாகங்களை மக்களுக்குக் செய்துகாட்ட வேண்டிய கடமை உள்ளது அதன்படி, ஒரு வருடத்திற்கு எம்.பி.க்குரிய சம்பளம் பெறமாட்டேன்.
அதேபோல் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள மாட்டேன் எனவும் கூறியிருந்த நிலையிலேயே இன்று இந்தக்கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]