ஒரு பெரிய ஆசீர்வாதம்!…13-இறாத்தல் 12அவுன்ஸ் குழந்தையை இயல்பாக பிரசவித்த பெண்.
கனடா-ஒட்டாவாவை சேர்ந்த பெண் ஒருவர் எகிறும் ஒரு பெண்குழந்தையை சாதாரண பிறப்பு நிறையை விட இரட்டிப்பு நிறையில் புதன்கிழமை காலை பிரசவித்தார்.
ஒக்லின் மெரடித லான்கில் 13. இறாத்தல் 12அவுன்ஸ் எடையுடன் இயல்பாக ஒட்டாவா வைத்தியசாலையில் பிறந்தாள்.
இவள் குறித்து இவளது பெற்றோர்களான கிறிஸ்-லின் மற்றும் மத்தியு லாங்கில் பெருமையடைந்துள்ளனர்.
ஒட்டாவா வைத்தியசாலையில் இவ்வாறு அதிக எடையுடன் குழந்தைகள் பிறப்பது சாதனை அல்ல என்றும் இருப்பினும் 25-வருட காலத்தில் பிறந்த அதிக எடை குழந்தை இவள் எனவும் கூறப்படுகின்றது.
சாதாரணமாக ஒரு குழந்தையின் சராசரி நிறை ஏழரை இறாத்தல்களாகும்