ஒரு நாள் முழுக்க பெற்றோரை எழுப்பிய குழந்தை: மனதை உருக வைக்கும் சிறுமியின் கதை!
பென்சில்வேனியா, பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு குடியிருப்பிலே இச்சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெற்றோர் இறந்தது தெரியாமல் அவர்களின் 7 வயது மகள் ஒரு நாள் முழுக்க எழுப்ப முயற்சி செய்துள்ளார். மறுநாள் எழுந்து சிறுமி வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பி சென்றுள்ளார்.
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் சிறுமி, தனது பெற்றோரை எழுப்ப முடியவில்லை என பேருந்து ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து தகவல் கிடைத்த பொலிசார், குடியிருப்பில் இறந்த நிலையில் கிடந்த சிறுமியின் பெற்றோர் உடலை மீட்டுள்ளனர்.
உயிரிழந்த 26 வயதான கிறிஸ்டோபர் டில்லி, 25 வயதான ஜெசிகா லல்லி தம்பதி அதிக போதை மருந்து உட்கொண்டதினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தம்பதிக்கு 7 வயது சிறுமி உட்பட 5,3 மற்றும் 9 மாத குழந்தை என நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்ட குழந்தைகள் தற்போது குழந்தைகள் நலத்துறை பாதுகாப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.